
மத்திய அரசு 2020-ல் மூன்று வேளாண் திருத்த சட்டங்களைக் கொண்டு வந்தது. அந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி பல மாநிலங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் மக்கள் ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில், பலவிதமாகப் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து மூன்று வேளாண் திருத்த சட்ட மசோதாக்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டது மத்திய அரசு.இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் நாடாளுமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. அதன்படி அக்குழு மார்ச் 19, 2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில், `விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கூடாது’ என்று பரிந்துரைத்துள்ளது.மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையை சட்டப்பூர்வமாக்குவதற்கு மாநிலங்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டுமென சட்டங்களில் பல மாற்றங்களை செய்ய மூன்று உறுப்பினர் குழு பரிந்துரைத்துள்ளது.குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அனில் கன்வாட், செய்தியாளர் சந்திப்பில் அறிக்கையினை வெளியிட்டார்.

“மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது அல்லது நீண்ட காலமாக நிறுத்தி வைப்பது இச்சட்டங்களை ஆதரிக்கும் பெரும்பான்மையினருக்கு அநீதியாகிவிடும்” என்று கூறினார்.