
வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளி ராமையா-பென்னம்மாள் இவர்கள் 8/11/22 அன்று இரவு சுமார் 1 மணிக்கு உறங்கிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரகசி ஏற்பட்டு வீடு தீ பற்றி எரிந்து உள்ளது இதன் அருகில் கட்டி இருந்த நான்கு ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தது இதனை அறிந்து அக்கம் பக்கத்தினர் வீட்டை அமைப்பதற்கு முயற்சி செய்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பகுஜன் சமாஜ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஐயாசாமி, மாவட்ட செயலாளர் பாக்யராஜ், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ், மாவட்ட செயலாளர் ஆனைவரி மூர்த்தியார், மாவட்ட பொருளாளர் சிவபெருமான், மற்றும் உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் பொன்னுரங்கம், ஆகியர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.