
வேங்கைவயல்: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி குடிநீரில் மலத்தை கலக்க சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது இந்த நிலையில் இன்று 28 ஜனவரி 2023 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்பில் இருந்த குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணைத்தலைவர் க.ராஜவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்தாஸ் அவர்களின் தலைமையில் மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர்கள்
கலந்து கொண்டு பதிக்கப்பட்ட மக்களின் வீட்டிற்கு சென்று கள ஆய்வு செய்தனர் இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- இந்திய நாட்டின் 74 வது குடியரசு தினம் கொண்டாடும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட தீண்டாமை ஒழியவில்லை என்பது மிக கொடுமையான ஒரு செயலாக ஒருமாத காலம் கடந்தும் உண்மை குற்றவாளிகள் யார் என்று ஏன் கண்டுபிடிக்க வில்லை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் என்றும் ஏழை எளிய மக்களை ஏமாற்றும் விதமாக சம்பவம் நடந்த இரண்டாவது நாளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் அரசு யாரோ இருவரை கைது செய்தது நாடகம் நடத்திய மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் குற்றச்சாட்டு வைக்கின்றனர்
. இதனை தொடர்ந்து வேங்கைவயல் கிராம மக்களிடம் விசாரிக்கும் பொழுது குற்றவாளிகை கைது செய்யும் நடவடிக்கை விட்டுவிட்டு எங்கள் பிள்ளைகளே காவல்துறை குற்றத்தை ஒப்புக்கொள்ளும் படி வற்புறுத்தினார்கள் மேலும் சமத்துவங்களுக்கு எங்களை அழைத்து பொங்கல் வைக்க சொல்லினார்கள் போன்ற தமிழக அரசு மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.