வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விசாரணை நடத்தி வரும் காவல்துறை; அமைச்சர்கள், எம் எல் ஏ.,க்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையான கண்டனம்.!

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத ஏன் அமைச்சர்கள், எம் எல் ஏ.,க்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்.

இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள். வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *