
நேற்று 28/02/22 விழுப்புரம் மாவட்டம் பில்லூர் ,பஞ்சமாதேவி,ஆனாங்கூர்,அகரம் சித்தாமூர் ,காணை குப்பம் ஆகிய கிராமங்களில் வாழும் வீடற்ற ஆதிதிராவிட சமூக ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க கோரி பல வருடங்களாக மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து.

பகுஜன் சமாஜ் கட்சி விழுப்புரம் மாவட்ட சார்பில் விழுப்புரம் தனி வட்டாட்சியர் ஆதி திராவிடர் நல அலுவலகத்தை பூட்டு போடு விழுப்புரம் பாண்டி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது இதனை அடுத்து அங்கு வந்த ஆதிதிராவிட தனி வட்டாட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட து.கண்கணிப்பாளர் அவர்களும் நேரில் வந்து பேராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். இந்த போராட்டத்தை எங்கள் மக்களுக்கு விடியல் கிடைக்கும் வரை கைவடுவதாக இல்லை என்று கூறி இருந்தார் இதனை அடுத்து காவல்துறை பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தார்.

இவற்றை அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட துறைக்கு மனுவினை அனுப்பி தீர்வு காண்பதாகவும் கூறி மாலை 4.30 மணியளவில் அனைவரையும் விடுதலை செய்தார். இந்த போராட்டம் மாநில செயலாளர் திரு சா. ஸ்டீபன்ராஜ் அவர்களின் முன்னிலையில்
கோரிக்கையை மனுவை ஏற்று ஒரு வாரத்திற்குள் அனைத்து கிராம மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தனர் .

இதில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிருத்தை கோ.கலியமூர்த்தி, மத்திய மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பஞ்சவர்ணம் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் அ.கோவிந்தசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.வினயாகமூர்தி, மற்றும் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிராம மக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பகுஜன் குரல் செய்திக்காக மாவட்ட செய்தியாளர் ஜீவரட்சகன்