
சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் இரவு விடிய விடிய கனமழை பெய்தது.புதுச்சேரி, வில்லியனூர், மதகடிப்பட்டு, அரியாங்குப்பம்,பாகூர், காலாப்பேட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம்,பிடாகம், கோலியனூர், வளவனூர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.