
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமானடி அடுத்த சித்தத்தூர் வேளியம்பாக்கம் சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது இதனால் பிடாகம், வேளியம்பாக்கம், அத்தியூர், போன்ற பகுதிகளில் இருந்து கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் சைக்கிள் மற்றும் நடந்து பள்ளி மாணவர்கள் வருவதற்கும் அப்பகுதியில் சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காய், கத்திரிக்காய், பச்சைமிளகாய் போன்ற தோட்டக்கலை பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் சாலை சரியான முறையில் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து சாலாமேடு வழியாக கண்டமானடி வேலியம்பாக்கம் சென்று வந்த பேருந்து நிறுத்தப்பட்டது இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் இந்த சாலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.