
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தன. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவை நடவடிக்கைள் பாதிக்கப்பட்டன. அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி இரு அவைகளையும் சேர்ந்த 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விதி 193ன் கீழ் விவாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி, காங்கிரஸ் எம்.பி.சக்திசிங் கோகில் கடிதம் கொடுத்துள்ளார்.
அருமை