
விருத்தாசலம்: கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் அண்ணாமலையின் உருவ பொம்மையை தி.மு.க.,வினர் நேற்று எரித்ததை கண்டித்து, விருத்தாசலம் பாலக்கரையில், தி.மு.க., என பெயர் எழுதிய உருவ பொம்மையை எரிக்க பா.ஜ.,வினர் நேற்று மாலை முயன்றனர்.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மையை எரிக்க விடாமல் பிடுங்கி சென்றனர். இதனால், தி.மு.க., அரசு மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வத்தை கண்டித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு, விருத்தாசலம் நகர தலைவர் மணியழகன் தலைமை தாங்கினார். எழிலரசன், ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ராஜேந்திரன், விவசாய பிரிவு ஜெயராமன், வடக்கு ஒன்றிய தலைவர் பரமசிவம், வடக்கு ஒன்றிய பொருளாளர் பாலு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.