விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானத்தால், 4 பேருக்கு மறுவாழ்வு.!

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவயல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் 59; கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு திருமணமான இரண்டு மகள்கள் உள்ளனர்.கடந்த 9ம் தேதி இரவு 7:00 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பலத்த காயத்துடன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேகர் அனுமதிக்கப்பட்டார். அவரை, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார்.குடும்ப உறுப்பினர்கள், அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க முன்வந்தனர். அதன்படி, இரண்டு கல்லீரல், சிறுநீரங்கள், தோல் என, நான்கு உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அவை, தமிழக அரசு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் தேவையான நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.தனியார் மருத்துவமனைகளுக்கு இரண்டு உறுப்புகள் வழங்கப்பட்டன. மற்ற உறுப்புகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *