
சென்னை: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்வி குறியாக விட்டதாகவும் விழுப்புரத்தில் பட்டபகலில் நேற்று கஞ்சா போதையில் இளைஞர்கள் இருவர் சூப்பர் மார்க்கெட் ஊழியரை கொலை சம்பவத்தில் ஈடுபட்டதை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியவாறு;- அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 68 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், அதிமுக ஆட்சியில் 100 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டதில் 27 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய நிதியமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த இபிஎஸ். இதனை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து வேண்டுமென்றே தவறான தகவல்களை நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் மாநகராட்சி பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரங்கள் செய்து வருவதாகவும்.
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. விடியா ஆட்சியில் விழுப்புரத்தில் கஞ்சா போதையில் படுகொலை நிகழ்ந்துள்ளது. எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா தாராளமாக புழக்கத்தில் இருக்கிறது. மேலும் சென்னை பெரம்பூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது. அம்மா உணவகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அம்மா உணவகத்தில் வழங்கும் உணவு தரமில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு எழுப்பினார்.