விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய சம்பவம் – பாதிக்கப்பட்ட 5 பேர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்.!

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பை சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், குற்றவழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர்ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட இதுவரை 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வருகிற 10-ந் தேதி வரை எழுத்துப்பூர்வமாக தங்களது புகார் மனுவை தாக்கல் செய்யலாம் எனவும், சப்-கலெக்டர் கூறியுள்ளார்.இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட செல்லப்பா, வேதநாராயணன், இசக்கி முத்து, சுபாஷ் உள்ளிட்ட 5 பேர் இன்று சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து மனித உரிமைகள் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *