
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு TTPL என்ற சுங்கச்சாவடி நிறுவனம் 100க்கும் மேற்பட்ட பல்வேறு பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்து பணி வழங்கியது. தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுங்கச்சாவடிகளில் தானியங்கி மின்னணு முறை நடைமுறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்த 56 ஊழியர்களுக்கு விரைவு தபால் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான தபால் அனுப்பிய மறுநாள் காலை அக்டோபர் 01 முதல் பணிக்கு வரவேண்டாம் என்று கூறியதால். முறையான முன் அறிவிப்பு இன்றி எங்களுக்கு வழங்க வேண்டிய தொகையும் வழங்காவில் என்று செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் மற்றும் உண்ணா நிலை போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊழியர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடி நிறுவனமும் அதற்கு துணை நிற்கும் நிலையில் மத்திய,மாநில அரசுகள் எங்களையும் எங்கள் வீட்டாரையும் எங்கள் பிள்ளைகளையும் வஞ்சிக்கப்பட்ட வருகிறது என்றும் தொழிலாளர்கள் 29 நாளான நேற்று உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அலுவலகம் எதிரில் சுங்கச்சாவடி ஊழியர் போன்று உருவ பொம்மை ஒன்றை தயார் செய்து அதற்கு உடை அணிவித்து ஊழியர்கள் தூக்கு மாட்டுவதைப் போல நூதன முறையில் போராட்டம் நடத்தி சுங்கச்சாவடி நிறுவனம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.