வானத்தில் இருந்து விழுந்த மர்ம உலோக உருளைகள் விழுந்ததால் குஜராத்தில் பீதி..!!

ஆமதாபாத் : குஜராத் கிராமங்களில், விண்ணில் இருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக, பந்து போன்ற வடிவிலான மர்ம உலோக உருளைகள் விழுந்ததால், மக்கள் பீதி அடைந்துஉள்ளனர்.ஆலோசனை கேட்க முடிவுகுஜராத்தில், முதல்வர் பூபேந்திர பாய் படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சில கிராமங்களில், கடந்த 12, 13 தேதிகளில், விண்ணில் இருந்து மர்ம உலோக உருளைகள் விழுந்து உள்ளன. இதனால், மக்கள் பீதியடைந்து போலீசிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஆனந்த் மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜடேஜா கூறியதாவது: தக்ஜிபுரா, காம்போலாஜ், ராம்புரா, பூமல் ஆகிய நான்கு கிராமங்களில், நான்கு உலோக உருளைகள் விழுந்து உள்ளன.ஒவ்வொரு உருளையும், 1.5 அடி விட்டத்தில் உள்ளன. இவை விழுந்ததால் யாருக்கும் காயமில்லை. இது, செயற்கைக்கோள் பாகம் போல தெரிகிறது. இதுதொடர்பாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் ஆலோசனை கேட்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.’இசட்எக்ஸ் – 9பிஅமெரிக்க விண்வெளி வீரர் ஜோனாத்தன் மெக்டவல் கூறியதாவது: கடந்த 2021ல், சீனா ‘சங் ஜெங் 3பி’ என்ற ராக்கெட் மூலம், ‘இசட்எக்ஸ் – 9பி என்ற தொலை தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அந்த ராக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது, குஜராத் அருகே அதன் கழிவு பாகங்களான இந்த உருளைகள் விழுந்துஉள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பி.எஸ்.பாட்டியா கூறியதாவது: ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களில், ‘ஹைட்ரோசைன்’ எனும் ஒருவகை திரவ எரிபொருள் இந்த உலோக உருளைகளில் சேமிக்கப் படும்.இந்த எரிபொருள் தீர்ந்து போனால், தானாகவே ராக்கெட்டில் இருந்து கழன்று விழுந்து விடும். குஜராத்தில் அப்படித் தான் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.ஆலோசனை கேட்க முடிவுகுஜராத்தில், முதல்வர் பூபேந்திர பாய் படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சில கிராமங்களில், கடந்த 12, 13 தேதிகளில், விண்ணில் இருந்து மர்ம உலோக உருளைகள் விழுந்து உள்ளன. இதனால், மக்கள் பீதியடைந்து போலீசிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஆனந்த் மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜடேஜா கூறியதாவது: தக்ஜிபுரா, காம்போலாஜ், ராம்புரா, பூமல் ஆகிய நான்கு கிராமங்களில், நான்கு உலோக உருளைகள் விழுந்து உள்ளன.ஒவ்வொரு உருளையும், 1.5 அடி விட்டத்தில் உள்ளன. இவை விழுந்ததால் யாருக்கும் காயமில்லை. இது, செயற்கைக்கோள் பாகம் போல தெரிகிறது. இதுதொடர்பாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் ஆலோசனை கேட்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.’இசட்எக்ஸ் – 9பிஅமெரிக்க விண்வெளி வீரர் ஜோனாத்தன் மெக்டவல் கூறியதாவது: கடந்த 2021ல், சீனா ‘சங் ஜெங் 3பி’ என்ற ராக்கெட் மூலம், ‘இசட்எக்ஸ் – 9பி என்ற தொலை தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அந்த ராக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது, குஜராத் அருகே அதன் கழிவு பாகங்களான இந்த உருளைகள் விழுந்துஉள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *