வாகன விபத்தில் தாய் மற்றும் மகன் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், முடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வேதவள்ளி. இந்த தம்பதிக்கு கிஷோர், திவாகர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதேபோல் தீர்த்தாலுநகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன். இவரும் கண்ணனும் நண்பர்கள். இந்நிலையில் இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக சேர்ந்து ஸ்ரீரங்கம், சமயபுரம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை கண்ணன் ஓட்டிவந்துள்ளார். பிறகு பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே வந்தபோது இவர்களின் காரை மற்றொரு கார் ஓவர் டேக் செய்ததால், கதிரவன் காரை வலதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி இவர்கள் கார் மீது நேருக்கு நேராக மோதியது.

இந்த விபத்தில் கண்ணன், அவரது தம்பி கார்முகில், அவரது 8 வயது மகன் லிங்கேந்திரன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த கண்ணணின் தாய் தமிழரசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிஷோர், சந்திரவதன் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *