
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வாகனங்களுக்கு புதிய வேக வரம்பு அமல் படுத்தப்படலாம். மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விக்கு பதிலளித்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார். பல்வேறு நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் புதிய வேக வரம்பு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார். சர்வதேச விதிகளின் அடிப்படையிலும், மாநில அரசுகளிடம் மேற்கொள்ளும் ஆலோசனைக்கு பிறகு, இருவழிச் சாலை, நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைகளில் புதிய வேக வரம்பு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.ஆண்டுக்கு ஐந்து லட்சம் விபத்துகள்சாலை விபத்துகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் விபத்துகள் நடப்பதாகவும் கட்காரி வருத்தம் தெரிவித்தார். விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை, தொற்றுநோய், போர், கலவரம் போன்றவற்றில் இறக்கும் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாக உள்ளது என்றார்.இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் பிற நடவடிக்கைகளுடன், பிரபலங்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.’புதிய உயர்மட்ட சாலைகளை அரசு அமைக்கிறது’பல நகரங்களுக்கு இடையே உள்ள பயண தூரத்தை குறைக்கும் வகையில் புதிய உயர்மட்ட சாலைகளை அரசு உருவாக்கி வருவதாக கட்காரி கூறினார். இந்த வரிசையில், இந்த புதிய சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு, டெல்லியில் இருந்து சண்டிகருக்கு உள்ள பயண நேரம் இரண்டரை மணி நேரமாக குறையும் என்றும், ஜெய்ப்பூர், டேராடூன் மற்றும் ஹரித்வாரை டெல்லியில் இருந்து இரண்டு மணி நேரத்தில் அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.