
வன்முறைச் சம்பவங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் பொருத்தமற்றவை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்தார்.ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு அன்று நடந்த இருசக்கர பேரணியில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் 35 பேர் காயமடைந்தனர்.குஜராத்தின் ஹிம்மத்நகர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமி அன்று கல் வீச்சு மற்றும் மோதல்களைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்த விதம், அரசு தொடர்ந்த நடவடிக்கைகள், பழிவாங்கும் வகையில் தெரிகிறது. இது பொருத்தமற்ற நடவடிக்கை.

இதுபோன்ற எடுத்துக்காட்டுகள் புதிய இந்தியாவுக்கு வழிவகுக்குமா? என்று மாயாவதி இந்தியில் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.பாஜக தலைமையிலான உத்தரப் பிரதேச அரசைக் கடுமையாகத் தாக்கிய அவர், குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் நீதித்துறையைப் புறக்கணித்து காவல்துறையும் அரசும் செயல்படுகின்றன.”இது தீங்கிழைக்கும் செயல் மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சியைக் கேலிக்கூத்தாக்கும் செயல்”.சட்டத்தின் ஆட்சிக்கு, தண்டனை என்பது சட்ட நடைமுறையின்படி இருக்க வேண்டுமே தவிர, அது தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.