
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த கணியாமூர் பள்ளி மாணவி மரணம் வன்புணர்வோ, கொலையோ இல்லை என ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி உறுதியாக உயர்நீதி மன்றம்கருத்து தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் மர்மமான முறையில் மரணமடைந்தாா். இதுதொடா்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தமிழ்நாடு அரசு மருத்துவ குழுக்களின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் வன்புணர்வோ, கொலையோ இல்லை என உறுதியாக உயர்நீதி மன்றம்கருத்து தெரிவித்துள்ளது.