
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை எனவும் இதனால் மக்கள் பணி பெரிதும் பாதிக்கப்படுவதாக துணைத் தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர் . இதில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திர கூட்டத்தை போல் தங்களுக்கும் நடத்தப்பட வேண்டும் என்றும் தலைவர்களுக்கு ஒதுக்கப்படும் இருக்கை போல் தங்களுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அரசு சார்ந்த தகவல்கள் மற்றும் ஆணைகள் துணைத் தலைவருக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும், ஊராட்சி மன்ற கட்டிடத்தில் பெயர் பலகையில் துணைத் தலைவர்கள் பெயர்கள் இடம்பெறாத ஊராட்சிகளில் உடனடியாக எழுத வேண்டும் எனவும், அரசு அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வுக்கு செல்லும் பொழுது முறையான தகவல்களை தங்களுக்கும் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை கூட்டமைப்பின் தீர்மானங்களாக நிறைவேற்றி, அதை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூட்டமைப்பின் தலைவர் பொன் மணிகண்டன், செயலாளர் ராதிகா பாஸ்கரன், பொருளாளர் ஜெயராஜ் இவர்கள் தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனுவை அளித்தனர் . மேலும் ,அவர்கள் கூறுகையில் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தங்களது அனைவரின் பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.