
வடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் ஏப்ரல் 14ல் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 132வது பிறந்த நாள் விழா பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன், மாவட்டச் செயலாளர் நடராஜன், மாவட்ட பொருளாளர் விஜயகாந்த், குறிஞ்சிப்பாடி தொகுதி செயலாளர் வேலாயுதம், தொகுதி செயலாளர் அல்லா பிச்சை, நகரத் தலைவர் பகஜன்பாரத், குறிஞ்சிப்பாடி நகரத் தலைவர் செல்வராஜ், பண்ருட்டி நகர தலைவர் மணி, கொளஞ்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் திரளாக கலந்துகொண்டு பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.