வங்க கடலில் 7-ந் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி என வானிலை ஆய்வு மையம் தகவல்.!

சென்னை,தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், ஆங்காங்கே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி இன்றும், நாளையும் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிநாளை மறுதினமும் (புதன்கிழமை), 7-ந் தேதியும் (வியாழக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் நாளை மறுதினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகிறது என்றும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நாளை மறுதினம் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், அதற்கு அடுத்த நாள் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது.மழை அளவுநேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தேவகோட்டை 8 செ.மீ., அம்பாசமுத்திரம் 6 செ.மீ., பேச்சிப்பாறை, தஞ்சாவூர் தலா 4 செ.மீ., சிவலோகம், கும்பகோணம், சிற்றாறு தலா 3 செ.மீ., போடிநாயக்கனூர், சோலையாறு தலா 2 செ.மீ., கன்னிமார், விருதுநகரில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *