லெட்டர் பேடு கட்சிகளை அதிரடியாக தூக்கிய தேர்தல் ஆணையம்.!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை பொருட்டு கட்சிகளுக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் அளிக்கிறது. அதேசமயம் இந்த நிபந்தனைகளை குறிப்பிட கால வரையறைக்குள் பூர்த்தி செய்ய தவறும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது.

செயல்படாமல் இருந்த, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் 253 கட்சிகள் செயலற்றவை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பதிவு செய்து, அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகள் செயல்படாமல் இருந்ததால் மே 25-அன்று அவற்றை பதிவு ரத்து செய்யப்பட்டது.கடந்த ஜூனில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதவிவையும் ரத்து செய்தது. இதுவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத 284 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த செய்தி லெட்டர் பேடு கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த கட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது.

அவை, தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் தேசிய கட்சி, சமூக சமத்துவ படை, சக்தி பாரத தேசம், தேசிய நல கட்சி, நமது திராவிட இயக்கம், மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், காமராஜர் ஆதித்தனார் கழகம், ஹிந்துஸ்தான் தேசிய கட்சி ஆகியவை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *