
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆவின் பொருள்கள் விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பேரவையில் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை துறைகள் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.தொடர்ந்து,ரேஷன் கடைகளில் ஆவின் பொருள்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் நாசர் பால்வளத்துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.1. பெரம்பலூர் மாவட்டம் பாலலூரில் நாள்தோறும் 6 லட்சம் லிட்டர் பால் கையாளும் விதமாக பால் பொருள் தயாரிக்கும் ஆலை ரூ. 150 கோடியில் அமைக்கப்படும்.2. நாமக்கல் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படும் ஆலை ரூ. 50 கோடியில் அமைக்கப்படும்.3. 12ஆம் வகுப்பு தேர்வில் தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண்களை பெறும் பால் உற்பத்தியாளர்களின் வாரிசுகளுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்படும்.4. நுகர்வோரின் தேவையை கருதி 10 புதிய வகை ஆவின் பொருகள்கள் வருங்காலங்களில் அறிவிக்கப்படும்.5. பால் உற்பத்தியாளர்கள் இறுதி சடங்கு செய்ய ரூ. 5,000 வழங்கப்படும்.