ரூ.37.66 கோடியில் விடுதிகள், பள்ளிக் கட்டிடங்கள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதுகலை கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம், மதுரை மாவட்டம் மதுரையில் 1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டிடம். திருவாரூர் மாவட்டம்-எடையூரில் 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டிடம் மற்றும் கொரடாச்சேரியில் 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டிடம், தென்காசி மாவட்டம் சோலைச்சேரியில் 1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போஜனபள்ளியில் 3 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம், என 300 மாணவர்கள் மற்றும் 150 மாணவிகள் பயன்பெறும் வகையில் 6 இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிக் கட்டிடங்கள். திருவள்ளூர் மாவட்டம்-தேர்வாயில் 3 கோடியே 70 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், காஞ்சிபுரம் மாவட்டம்- மவுலிவாக்கத்தில் 3 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஈஞ்சம்பாக்கத்தில் 1 கோடியே 74 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், மயிலாடுதுறை மாவட்டம் கொண்டலில் 1 கோடியே 62 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவிலும், 916 மாணவர்கள் மற்றும் 839 மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள 4 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறைக் கட்டிடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள்.

செங்கல்பட்டு மாவட்டம்-குமிழியில் 12 கோடி ரூபாய் செலவிலும், நீலகிரி மாவட்டம்- மு. பாலாடாவில் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம் செங்கரையில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவிலும் ஒரு பள்ளியில் 480 மாணவர்கள் பயிலும் வகையில் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் என மொத்தம் 37 கோடியே 66 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் பொருட்டு அம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கென தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 197 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *