
ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கீழ்ப்பாடியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது பள்ளியின் இடைநிலை ஆசிரியர் மகேந்திரா தலைமை வகித்தார் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார் ரவிக்குமார் அனைவரையும் வரவேற்றார் பள்ளியில் நடைபெறும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பள்ளிக்கு தேவையான சுற்றுச் சுவர் பழுதடைந்த கட்டிடங்களை சரி செய் வேண்டுமென தலைவரிடம் தீர்மானம் அளித்ததற்கு மேலாண்மை குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் சுதா அவர்கள் மையத்தை நடத்துகின்றார் எனவும் மையம் சிறப்பாக நடைபெற பள்ளி மேலாண்மை குழு ஒத்துழைக்கும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இடைநிலை ஆசிரியர்கள் சுகன்யா இளையராஜா மணிமேகலை முத்துலட்சுமி காசி அம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளராக இல்லம் தேடி கேள்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தனஞ்செழியன் கலந்து கொண்டார் இறுதியில் தன்னார்வலர் ரேவதி நன்றி கூறினார்.