
செங்கனாங்கொல்லை: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த செங்கனாங்கொல்லை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 166 குடும்பங்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டது இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார் இதனை கடந்த 24/11/22 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது இதனை அடுத்து பகுஜன் சமாஜ் கட்சியினர் சார்பில் இடத்தை அளந்து உரிய பயனாளிகளுக்கு தரும்படி பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்த வருவாய் துறை அதிகாரிகள் இன்று இடத்தை அளந்து உரிய பயனாளிக்கு வழங்குவதாக கூறினார்கள் ஆனால் இன்றும் அரசு அதிகாரிகள் வராததால் கோபம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்திற்கு 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது இதனை அறிந்த திருக்கோவிலூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் நடவடிக்கை எடுப்பாரா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மக்கள் எதிர்ப்பு.