ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற, 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடற்படை பறிமுதல்; திமுக கவுன்சிலர் கைது.!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற, 360 கோடி ரூபாய் மதிப்பிலான ‘கோகைன்’ போதைப் பொருளை, கடற்படை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளை சாலையில், நேற்று முன்தினம் இரவு, கடற்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போது அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற சொகுசு காரை மடக்கி பிடித்து காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 20 லிட்டர் மின்னரல் வாட்டர் , 30 கேன்களில், கோகைன் போதைப் பொருளுக்கான மூலப்பொருட்கள், சுமார் 360 கிலோ இருந்தன. இந்த போதைப் பொருளை, வேதாளை சாதிக் அலி, 36, என்பவரின் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்தத அதிர்ச்சி செய்தியை தெரிந்தது கொண்ட காவல்துறை. போதைப் பொருளை பறிமுதல் செய்து, காரில் இருந்த சகோதரர்களான, கீழக்கரை நகராட்சி தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன், மற்றும் 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக இருந்து வரும் சர்ப்ராஸ் நவாஸ், ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு, 360 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது காவல்துறை. கடத்தல் சகோதரர்களான தி.மு.க.,வினருக்கு, சென்னையில் இருந்து ராமநாதபுரம் சரக்கு லாரி சர்வீஸ் நிறுவனம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல், ‘மாபியா’ கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என, மத்திய -மாநில உளவு துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை ராமேஸ்வரம் பகுதியில் பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *