
ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் பெருமளவு அதிகரித்தது வருவதாகவும். சமீபத்தில் தித்வான மற்றும் தோல்பூரில் தலித் சிறுமிகள் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் அல்வாரில் டிராக்டர் ஏற்றி தலித் இளைஞரை கொன்றதும், ஜோத்பூரில் தலித் இளைஞர் கொல்லப்பட்டதும். தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்களை பெருமளவுக்கு பதித்துள்ளது இதிலிருந்து காங்கிரஸ் அரசு குறிப்பாக தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களைக் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வியாடைந்துள்ளது.

எனவே காங்கிரஸ் ஆட்சியை கலைத்து விட்டு ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறை படுத்த வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும் உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.