ராஜஸ்தானில் காவலரை கன்னத்தில் அறைந்த பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி மீது வழக்கு பதிவு.!

ராஜஸ்தான்: பாஜகவை சேர்ந்த முன்னாள் மக்களவை எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பரத்பூரில், பாதுகாப்பு அதிகாரிகளை தடுத்ததாகவும், காவலர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரத்பூரில், அகத் திராஹே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று காவலர் கஜ்ராஜ்சிங் என்பவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், இரவு 7 மணியளவில் காரில் வந்த பாஜக முன்னாள் எம்பி, தனது காரில் வந்து நடுரோட்டில் நிறுத்தினார். அந்த காருக்குள் கிருஷ்ணேந்திரகவுர் அமர்ந்திருந்தார். காவலர் கஜ்ராஜ் அவரது ஓட்டுநரிடம் காரை மாற்ற சொல்லியும் கேட்கவில்லை. மாறாக கவுர் என்னை திட்ட ஆரம்பித்தார், சிறிது நேரம் கழித்து அவர் தனது காரில் இருந்து இறங்கி என்னை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அவருக்கு துணையாக ஓட்டுனரும் வேறு சிலரும் இருந்தனர். அப்போது தலைமைக் காவலர் என்னுடன் பணியில் இருந்தார்” என்று காவலர் கஜ்ராஜ்சிங் கூறினார். இதனையடுத்து கோட்வாலி காவல் நிலையத்தில் பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணேந்திரகவுர் மீது அந்த காவலர் புகார் அளித்தார். பணியில் இருந்த காவலரிடம் தவறாக நடந்து கொண்டதாக கிருஷ்ணேந்திரகவுர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, விரைவில் விசாரணை தொடங்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் அனில் மீனா தெரிவித்தார். பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணேந்திர கவுர் பரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *