ரயில்வேயில் வேலை வாங்கித் தர நிலத்தை லஞ்சமாக பெற்று பணமோசடி பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை.!

பீகார்: கடந்த 2004 – -2009ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. வேலை வாங்கித் தருவதற்கு லாலு குடும்பத்தினர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீஹார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவியிடம் ஏற்கனவேசி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், லாலுவின் மகனும், பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி, கடந்த மார்ச்சில் புதுடில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் எட்டு மணி நேரம் விசாரணை நடந்தது.

இதற்கிடையே, வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்றதில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் இன்று தேஜஸ்வி ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *