
தமிழகத்தில் மே 3ஆம் தேதி ஈகைப் பெருநாள் (ரமலான்) கொண்டாடப்படும் என தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பிறை தென்படாததைத் தொடர்ந்து இதனைத் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர், காஜா மொய்தீன் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் பெருநாள் பிறை காணப்படவில்லை.

ஆதலால் நாளை மே 2ஆம் தேதி ரமலான் பிறை 30ஆம் நாள் ஆகும் என தலைமை காஜி ஸாஹிப் அறிவித்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரமலான்பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி, 30-வது நாளான இன்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது.செளதி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று முன்தினம் பிறை பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.