
திருச்சி: ரமலான் பண்டிகையை முன்னீட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை பரோலில் விடுவிக்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில பொது செயலாளர் எஸ் ஷாஜஹான் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க பட்டது இவ்மனுவில் கூறியிருப்பதாவது.
இஸ்லாமிய சிறைவாசிகள் அவர்களது மனைவி குழந்தைகளை பிரிந்து மன அழுத்ததுடன் 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
ஆகவே – இஸ்லாமிய சிறைவாசிகள் அவர்களது மனைவி குழந்தைகளுடன் இந்த மாதம் வருகிற ரமலான் பண்டிகையை கொண்டாட ஒரு வாய்பு அளித்து பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் என்று அவ்மனுவில் கூறியுள்ளார் .
மேலும் இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் .மாவட்ட செயலாளர் நத்தர் ஒளி . மாவட்ட தொழிலாளரணி தலைவர் அப்பாஸ் மாவட்ட மகளிரணி தலைவவி பல்கீஸ் .மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.