ம.பொ.சி. உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: ம.பொ.சி. என அழைக்கப்படும் ம.பொ.சிவஞானத்தின் 117-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது உருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.ம.பொ.சி. உருவப்படத்துக்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் ம.பொ.சி. மகள் மாதவி பாஸ்கரன், பேரன் செந்தில் ம.பொ.சி. ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.ம.பொ.சி. உருவப்படத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் வேலு, ஜெ.கருணாநிதி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.மேலும் அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *