
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரிலிருந்து புகோபா நகரை நோக்கி 39 பயணிகள், 2 விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உள்பட 43 பேர் சென்ற விமானம் 100 மீட்டர் 328 அடி உயரத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது சிக்கலை எதிர்கொண்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும்போது விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். விமான நிலையத்தை நெருங்கும் போது மழை பெய்ததால், மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும்பணி தொடர்ந்து கிராமமக்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.