
புதுதில்லி: 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக நாட்டில் 2,227 பேர் இறந்துள்ளனர். இது 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் ஐந்தாவது வெப்பமான ஆண்டாக பதிவாகி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.2022 இல் இந்தியாவின் காலநிலை அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.அதில், 2022 ஆம் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதம் தவிர, மற்ற பத்து மாதங்களிலும் சராசரி வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. இது 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் ஐந்தாவது வெப்பமான ஆண்டாக பதிவாகி உள்ளது. உலகளவில் கூட, 2022 ஆவணத்தில் ஐந்தாவது அல்லது ஆறாவது வெப்பமான ஆண்டாக இருக்கலாம் என ‘உலகளாவிய காலநிலை’ அறிக்கையில் உலக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் கடந்த முற்றிலும் மாறுபட்ட அதிகப்படியான வானிலை நிகழ்வுகளில், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுக்கு 1,285 பேர் இறந்துள்ளனர். இது மொத்த இறப்புகளில் 58 சதவீதமாகும். வெள்ளம் மற்றும் கனமழைக்கு (835), பனிப்பொழிவுக்கு (37), வெப்ப அலைகளுக்கு (30), புயல்களுக்கு 22 பேர் இறந்துள்ளனர்.பிகாரில் மட்டும் இடி, மின்னலுக்கு 414 பேர், ஓடிசாவில் 168 பேர், ஜார்கண்டில் 122 பேர், மத்தியப்பிரதேசத்தில்116 பேர் உத்தரப்பிரதேசத்தில் 81 பேர், ராஜஸ்தானில் 78 பேர், சத்தீஸ்கரில் 71 பேர், மகாராஷ்டித்தில் 64 பேர், அசாமில் 58 பேர் இறந்துள்ளனர்.ஒட்டுமொத்தமாக, பிகார், அசாம், உ.பி மற்றும் மகாராஷ்டிரத்தில் முறையே 418, 257, 201 மற்றும் 194 இறப்புகளுடன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.1981 முதல் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 0.51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.கடந்த ஆண்டு குளிர்காலத்தில் (ஜனவரி – பிப்ரவரி) வரை சராசரியான வெப்பநிலை இருந்தபோதிலும், மீதமுள்ள பத்து மாதங்களில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை இருந்தது.கடந்த ஆண்டு நாட்டில் பருவமழைக்கு முன்னர் வெப்பமாக இருந்தது. 2022 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 6 நாள்களுக்கு மேலாக வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி வரை இருந்தது. மேலும், ஏப்ரல் 29 இல் 70 சதவீதம் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.“ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதத்தில் இந்தியாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் கிழக்குப் பகுதிகளில் வெப்ப அலை பரவியது. இந்த மாதங்களில் அசாதாரணமாக அதிகமாக நிலவிய வெப்பநிலையால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது,” மொத்தத்தில் மோசமான வானிலை காரணமாக 2,227 பேர் பலியானதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.