மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரசை ஆதரிக்க மாட்டோம் – மம்தா பானர்ஜி திட்ட வட்டம்.!

கல்கட்டா: மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரசை ஆதரிக்க மாட்டோம் என திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை கொடுத்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் ஜூலை 8 ல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. வேட்புமனு தாக்கலின் போது கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த மோதல் தொடர்பாக மம்தா கூறியதாவது:-

பல மாநிலங்களை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரிய கூட்டணி கட்சியாக உள்ளது.

பா.ஜ.,வின் ஆட்சியைக் கைப்பற்ற 2024ல் நடைபெற்ற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் உதவியை அக்கட்சி எதிர்பார்க்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. நாங்களும் பா.ஜ.,வை எதிர்த்து போராட விரும்புவதால், காங்கிரசுக்கு ஆதரவளிப்போம்.

ஆனால், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டால், நாங்கள் ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் எதிர்பார்க்கக் கூடாது என்று மம்தா பானர்ஜி திட்டம் வட்டமான தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *