மேகதாது அணைகட்டுவதை தடுக்க கோரி ஒகேனக்கல்லில் 24-ந் தேதி ஆர்ப்பாட்டம்- தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.!

தருமபுரி:தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பின்பு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-ஒகேனக்கல் பகுதியில் இருந்து காவிரி உபரி நீரை நீரேற்று திட்டத்தின் மூலம் ஏரிகளுக்கு நிரப்பி மாவட்டத்தை வறட்சியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். காவிரி உபரி திட்டம் நிறைவேற வேண்டுமென்றால் காவிரி ஆற்றில் தண்ணீர் வர வேண்டும்.காவிரியில் வரும் தண்ணீரை தடுக்கின்ற வகையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.கவும் ஒன்றாக சேர்ந்து மேகதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று சொல்கிறார்கள். இத்திட்டத்தால் தமிழகத்தில் ஒரு துளி கூட தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் எனவே கர்நாடக அரசின் திட்டத்தை கைவிட வேண்டும்.மத்திய அரசு அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும். கர்நாடகா பகுதியில் மேகதாது அணை கட்டுவதை நிறுத்த கோரியும் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை போக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி வரும் 24-ந் தேதி தருமபுரி தலைமை தபால் அலுவலகத்திலிருந்து ஒகேனக்கல் வரை வாகன பேரணி புறப்பட்டு ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கம் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *