
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சராசரியாக 5,500 மெ.டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு பெறப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் மறுசுழற்சி நிலையங்களில் உரமாகவும் எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகின்றன.சென்னை மெரீனா கடற்கரையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.2.10 கோடி மதிப்பில் நவீன நடமாடும் எரியூட்டும் ஆலை கடந்த ஆண்டு ஏப்.28-ஆம் தேதி அமைக்கப்பட்டது.இதன்மூலம் இங்கு சேகரமாகும் நெகிழி மற்றும் இதர உலா்கழிவுகள் அங்கேயே எரியூட்டப்படுகின்றன. இந்த நவீன நடமாடும் எரியூட்டும் ஆலை தினமும் சுமாா் 5 மெ. டன் அளவிலான உலா் கழிவுகளை எரியூட்டும் திறன் கொண்டதுநிறுவப்பட்டது முதல் இதுவரை 852 மெ.டன் நெகிழி மற்றும் இதர உலா் கழிவுகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் விதிகளுக்குட்பட்டு எரியூட்டம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.