
புதுடெல்லி: உலக நாடு முழுவதும் கொரோனா ஆலையில் இருந்து பெரியவர் முதல் சிறியவர்கள் வரை சிக்காதவர்கள் யாரும் இல்லை இந்த நிலையில் பலரும் பல வகையான தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பாரத்பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாகசெலுத்தும் கரோனா தடுப்பூசி தனியாருக்கு ரூ.800-க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.325-க்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு எதிரான போரில், மேலும் ஒரு சாதனையாக, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாகச் செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான விலைப் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது.உலகில் முதன்முதலாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் உருவாக்கியுள்ளது. அந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸாக இது போடப்படுகிறது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது.மூக்கு வழியாகசெலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.மூக்கு வழியாக தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொள்ளும் பயனாளிகள், அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். தடுப்பு மருந்துக்கான விவரத்தை கோவின் வலைத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.பயனாளிகள் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மூக்கு வழியே செலுத்தும் கரோனா தடுப்பூசி 2023 ஐனவரி நான்காவது வாரத்திலிருந்து கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.