முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது!” -பிரசாரத்தில் மோடி உரை.!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. மார்ச் 7-ம் தேதி வரை மொத்தம் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 58 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று(பிப்ரவரி 10) நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு சஹரான்பூரில், பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். நாடு முழுவதும் ஹிஜாப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், நேற்று பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “முஸ்லிம் மதத்தைச் சார்ந்த லட்சக்கணக்கான பெண்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.பாஜக அரசு முஸ்லிம் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. நெடுங்காலமாக இஸ்லாமிய பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த முத்தலாக் எனும் அநீதியை ஒழித்தது பாஜக அரசு தான். இஸ்லாமியபெண்கள் மத்தியில் பாஜக-விற்கு கிடைத்துவரும் ஆதரவினால் தான் பா.ஜ.க பற்றிய பொய்யான கருத்துகளை மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால், இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஒருபோதும் பா.ஜ.க ஏற்றுக்கொள்ளாது. உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களுக்கான உரிமைகள் உறுதிசெய்யப்பட இங்கு பா.ஜ.க அரசு நீடிப்பது மிக அவசியமான ஒன்று” என மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *