முதலாளியை 100 முறை கத்தியால் தாக்கிய பணிப்பெண்: மேல்முறையீடு தோல்வி.!

சிங்கப்பூரில் கடந்த 2016ஆம் ஆண்டு திருவாட்டி சியாவ் கிம் சூ, 59, என்ற தன்னுடைய முதலாளியை ஒரு பணிப்பெண் ஒரு கத்தியால் கிட்டத்தட்ட 100 முறை தாக்கினார். அதன் தொடர்பில் டரியாதி, 29, என்ற அந்தப் பணிப்பெண் கொலை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.அதற்காக பணிப்பெண்ணுக்கு சென்ற ஆண்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.கொலை செய்த குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டரியாதி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (மார்ச் 31) அவரின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.“தம் கட்சிக்காரர், கொலைக் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.“ஆனால் இதற்குப் பதிலாக நோக்கமில்லா மரணம் விளைவித்ததாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என பணிப்பெண்ணின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் வாதாடினார்.ஆனால், மூன்று பேரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் இதை ஏற்கவில்லை.தெலுக் குராவில் இருக்கும் திருவாட்டி சியாவின் வீட்டில் 2016 ஜூன் 7ஆம் தேதி அந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்தது.தன் கடவுச்சீட்டை முதலாளியிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும். அவரிடம் இருந்து பணத்தைத் திருட வேண்டும். இந்தோனீசியாவுக்கு தப்பி ஓடிவிட வேண்டும் என்று இந்தோனீசியாவை சேர்ந்த டரியாதி திட்டம் போட்டு இருந்தார்.ஆனால் அந்தத் திட்டத்தை முதலாளி முறியடித்துவிட்டார்.அதையடுத்து முதலாளியைப் பணிப்பெண் கொலை செய்துவிட்டார். முதலாளியின் உடலில் குறைந்தபட்சம் 94 கத்திக் காயங்கள் காணப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை தலையிலும் கழுத்திலும் இருந்தன.2016 ஏப்ரல் 13ஆம் தேதி அந்தக் குடும்பத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கத் தொடங்கினார் டரியாதி. ஆனால் அவருக்குச் சொந்த வீட்டின் நினைவு அளவுக்கு அதிகமாகிவிட்டது.திருவாட்டி சியாவிடம் இருந்து தன் கடவுச்சீட்டைப் பெற்றுவிட வேண்டும்; அவரிடம் இருந்து பணத்தைப் பெற வேண்டும்; தன் நாட்டிற்குத் தப்பிச்சென்று ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய டரியாதி, ஒரு கத்தியை எடுத்து திருவாட்டி சியாவை மிரட்டினார்.கத்தியைத் தீட்டி வைத்துக்கொண்ட அவர், சிறிதாக இரண்டாவது கத்தி ஒன்றையும் ஆயுதமாக வைத்திருந்தார்.பிறகு ஒரு பெரிய கத்தியை சாமான்கள் அறையில் இருந்து எடுத்துக்கொண்டு திருவாட்டி சியாவை அணுகினார். சியாவ் சத்தம் போட்டு போராடினார். அவரை கத்தியால் பலமுறை டரியாதி தாக்கினார்.டரியாதி மீது மரணம் விளைவிக்கும் நோக்கத்துடன் கொலை செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதற்கு கட்டாய மரண தண்டனை உண்டு.இருந்தாலும், பிறகு குற்றச்சாட்டை ஆயுள் தண்டனை கிடைக்கக்கூடிய ஒன்றாக அரசினர் தரப்பு குறைத்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *