
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், 26-ந் தேதி மாஸ்கோ செல்கிறார். அங்கு அவரை அதிபர் புதின் வரவேற்கிறார். அதைத்தொடர்ந்து அவர் அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அதைத்தொடர்ந்து அவர் உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளின்போது, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.இதுகுறித்து ஆன்டனியோ குட்டரெஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உயிர்களை காப்பாற்றவும், மனித துன்பங்களை முடிவுக்கு கொண்டு வரவும், உக்ரைனில் அமைதியைக் கொண்டு வரவும் அவசர நடவடிக்கைகள் தேவை” என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது தொடர்பாக ஐ.நா. அமைப்புகளின் நிர்வாகிகளையும் ஆன்டனியோ குட்டரெஸ் சந்திக்கிறார்.தனது பயணம் தொடர்பாக அவர் ரஷிய அதிபர் புதினுக்கும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.