
கள்ளக்குறிச்சி:உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகே உடையானந்தல் கிராமத்தில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்பவரின் இரண்டாவது மகன் கோபாலகி ருஷ்ணன், வயது29, இளங்கலை பொறியியல் பட்டதாரி, புதிதாக கட்டப்பட்ட வீட்டின் கட்டுமானப் பணிக்காக கம்பி வெட்டும் இயந்திரத்தில் பணிபுரியும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது அப்போது வீட்டில் இருந்து உறவினர்கள் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, வழியிலேயே வாலிபர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் காவல் நிலைய காவல்துறையினர் விரைந்து வந்து இறந்த இளைஞரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.