
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சிங அலுவலக கூடாரங்கில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 132வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழியினை இன்று ஏற்றுக் கொண்டனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த சட்ட மேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாள் அன்று சமத்துவ நாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி 110 ன் கீழ் அறிவித்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி அனுசரிக்க ஆணையிட்டுள்ளார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது இவ்வாண்டு 14/04/2023 அன்று அன்று அரசு விடுமுறை நாளாக இருப்பதால் இன்றைய தினம் 13/04/2023 மாவட்ட ஆட்சியர் திரு.ஷர்வன்குமார் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.