மாற்றுத்திறனாளிகள் ‘இ-சேவை’ மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்.!

விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில் வருவாய் கிராமத்துக்கு ஒரு தனியார் ‘இ-சேவை’ மையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, புதிய உரிமம் பெற, https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ‘இ-சேவை’ மையம் அமைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறது.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் ‘இ-சேவை’ மையம் அமைக்க விண்ணப்பித்தவர்களின் பெயர் பட்டியல் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு தெரிவிக்க உள்ளதால் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் 27-ந் தேதிக்குள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதற்கான விதிமுறைகள், நிபந்தனைகளை தெரிந்துகொள்ள இவ்வலுவலகத்தை 04146-290543 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட அலுவலக பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரில் அணுகி தெரிந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் திரு.சி.பழனி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *