
சென்னை: தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் அரசு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மாண்டஸ் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் அரசு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் நாகை கடலூர் துறை முகங்களில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதனிடையே சென்னை மாநகராட்சி சார்பில் அவசர உதவிக்காக 044-2561 9206,044-2561 9207,044-2561 9208 என்ற எண் மற்றும் 1913 என்ற எண்ணிலும் அழைக்கலாம் எனவும், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டு உள்ளது. சென்னையில்பல்வேறு இடங்களில் மழைசென்னையில் ராயப்பேட்டை,மயிலாப்பூர் அண்ணாசாலை,கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காகஞ்சிபுரம் தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை , நாகை, திருவாரூர்,அரியலூர் பெரம்பலூர்,திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை தேனி திண்டுக்கல் திருப்பூர் கோவை, நீலகிரி தென்காசி, நாமக்கல் மற்றும் தூத்துக்குடி சிவகங்கை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த மூ்னறு மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருச்சி மற்றும் திருவள்ளுவர் பல்கலையில் டிச.,9 மற்றும் 10 ம் தேதிகளில் நடைபெற இருந்த பருவததேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.மேலும் அண்ணா பல்கலையிலும் நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கிவைத்துக்கொள்ளவும் தேவையற்ற பயணத்தை தவிர்கக வேண்டும் என தமிழக தலைமைச்செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார். கடற்கரைக்கு செல்வதையும் பலத்தகாற்று வீசும்போது மரங்களின்கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளின் அருகிலும் திறந்தவெளியில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுவை மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது புதுவை அரசு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.