மாணவர்களின் ஆபாச படங்கள்.. வாங்க பழகலாம் என வருமானம்! அதிர வைத்த அரசு பள்ளி ஆசிரியை.!

மதுரை : மதுரையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய நிலையில், அந்த ஆசிரியையிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததும் அவற்றை முகநூலில் பதிவேற்றி லட்சக்கணக்கில் வசூலித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 மாணவர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இது குறித்து மதுரை மாநகர போலீசாருக்கு தகவல் வந்தது.இந்த விவாகரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார் உத்தரவிட்ட நிலையில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த வீடியோவில் இருந்தது மதுரை பெத்தணியாபுரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றும் பெண் என்பதும், தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களை மிரட்டி அவருடன் உல்லாசமாக இருப்பது அவற்றை வீடியோவாக எடுத்து மற்ற மாணவர்களுக்கும் காட்டி அவர்களையும் தனது வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்தது தெரியவந்தது. ஒரு பெண்ணுடன் 2 3 ஆண்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பார்த்த ஆசிரியை தானும் அதே போல் இருக்க வேண்டும் என்று தன்னிடம் ட்யூசன் படித்த மாணவர்களை மிரட்டியும் மயக்கியும் இந்த விபரீதத்தில் ஈடுபட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் 43 வயதான அந்த ஆசிரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் அந்த விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக ஆசிரியையின் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் தற்போது வெளியான வீடியோ இல்லாமல் மேலும் பல மாணவர்களை மயக்கி அந்த ஆசிரியை ஆபாச செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.மேலும் , கடந்த 2 ஆண்டுகளாக இந்த பாலியல் விவகாரம் தொடர்ந்து நடந்திருக்கிறது நிலையில், அவரது லேப்டாப்பில் உள்ள படங்கள், வீடியோ பதிவுகளை ஆதாரமாக கொண்டு போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ‘வாங்க பழகலாம்’ என்ற பெயரில் முகநூலில் குரூப் ஆரம்பித்த ஆசிரியையும் இதற்கு உடந்தையாக இருந்த வீரமணி என்பவரும், மாணவர்களுடன் ஆசிரியை உல்லாசமாக உள்ள வீடியோக்களை போட்டு லிங்க் கொடுத்துள்ளனர். வீரமணி அல்லது ஆசிரியையின் வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தினால் மட்டுமே அந்த லிங்க் ஓபன் வகையில் அதனை தயார் செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அடுத்தடுத்து இந்த விவகாரத்தில் தோண்டத் தோண்ட ஏராளமான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆசிரியை மற்றும் அவரது கள்ளக்காதலன் வீரமணியை நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியை மீது அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆசிரியை மீதான புகார் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தவும், தான் பணியாற்றும் பள்ளிகளிலும் ஆசிரியை இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டாரா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *