
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை, உட்கோட்டம் திருநாவலுார் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் உதவி ஆய்வாளர் மணிமேகலை. இவர், கடந்த 24ம் தேதி இரவு 11:00 மணியளவில் கெடிலம் அருகே ஊர்க்காவல் படையை சேர்ந்த மனோகரன் என்பவருடன் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது பண்ருட்டி நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மாடுகளை ஏற்றி சென்றதற்காக ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்ய போவதாக உதவி ஆய்வாளர் மிரட்டினார். வழக்கு பதியாமல் இருக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின், பேரம் பேசி 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு மாடுகளுடன் மினி லாரியை அனுப்பி வைத்தார்.
பதிக்கப்பட்ட ஓட்டுநர் இது குறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி., மோகன்ராஜிக்கு புகார் சென்றது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் மணிமேகலை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார். அதன்பேரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பாண்டியன், திருநாவலூர் உதவி ஆய்வாளர் மணிமேகலையை நேற்று பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.