மருத்துவ மாணவர்கள் “உறுதிமொழியில் சமஸ்கிருத” சர்ச்சை கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை..!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் புதிதாக சேரும் மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கும் வெள்ளை அங்கி அணிவித்து இப்போகிரேடிக் உறுதிமொழி ஏற்க வைப்பது பின்பற்றப்படுகிறது.அந்த வகையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் முன்னிலையில், 250 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் ஆங்கிலத்தில் சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்த உறுதிமொழியை தவறுதலாக, மாணவர் சங்க பொதுச்செயலாளர் பதிவிறக்கம் செய்துவிட்டதாக மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி கூடுதல் பொறுப்பாக டீன் பொறுப்பையும் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *