
சேலம்: மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ரகு என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன், பிரகாஷ், மூர்த்தி ஆகிய மூன்று பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று தீபாவளி தினத்தன்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த ரகு மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரகுவை விடாமல் பின் தொடர்ந்து வந்த மூன்றுபேர் கொண்ட கும்பல் மேட்டூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ரகுவை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரகுவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் காவல்துறையினரிடம் புகாரளித்த நிலையில், இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.